Homeபிற செய்திகள்கோவையில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அதிநவீன மருத்துவ ஆய்வகம் துவக்கம்

கோவையில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அதிநவீன மருத்துவ ஆய்வகம் துவக்கம்

இந்தியாவின் முன்னணி நான்கு பரிசோதனை நிறுவனங்களில் ஒன்றாக நியூபெர்க் டயாக்னாஸ்டிக்ஸ் திகழ்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 150 கிளைகளையும் 2000-க்கும் மேற்பட்ட தொ டர்பு மையங்களையும் கொண்டுள்ளது.

விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகு தியாக தமிழ்நாட்டில், கோ வையில் ஓர் ஆய்வகத்தை துவங்கியுள்ளது. ஆய்வகத்தை துவக்கி வைத்து, கோவை மாநகர மேயர் கல்பனா பேசி னார்.

நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு பேசுகையில், “இந்த ஆய்வகம், கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் மூலக் கூறுகளை பரிசோதனை செய்யும் அதிநவீன கருவிகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது,” என்றார்.

நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் குழுமத் தின் தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன் பேசுகையில், “இப்புதிய ஆய்வகத்தால், கோவை மக்க ளுக்கும் அதை சுற்றியுள்ள நீலகிரி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கும் தரமான, அதிநவீன பரிசோதனைகளை வழங்கும் பொறுப்பினை பெற் றுள்ளோம்,” என்றார். கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில், பரிசோதனைக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன.

இந்த ஆய்வகத்தில் நாள் ஒன்றுக்கு 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஊட்டி, ஈரோடு மற்றும் உமன் சென்டர் மதர்வுட் ஆகிய இடங்களில் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.

விரைவில், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் ஆய்வகங்களும், 100 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு மையமும் அமைக்கப்படும். பொதுமக்கள் நலமையம், வருமுன் நலம் காக்க பரிசோத னைகள், வீடுகளில் மாதிரி சேகரித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப் படும்.

வீடுகளில் மாதிரிகளை சேகரிக்கவும், பிற சேவைகள் குறித்த விபரங்களுக்கும் 9700369700 என்ற இலவச அழைப்பிற்கு அழைக்கலாம்.

விழாவில், தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை நுண்ணுயிர் நிபுணர் டாக்டர் சரண்யா நாராயண், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.மகேந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img