கோவை மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற வழக்குகளை சிறப்பாக துப்புதுலக்கி எதிரிகளை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிழ்கள் வழங்கினார்.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு தனிப்பிரிவு காவல் துறையினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர், 8 காவல் ஆய்வாளர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 7 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.