fbpx
Homeபிற செய்திகள்கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச்.-ல் வரும் 24-ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச்.-ல் வரும் 24-ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.ஹெச். கோவில்பாளையம் மருத்துவமனையில் வரும் 24-ம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இம்முகாமில், கேஎம்சிஹெச் மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ துறைகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

இம்முகாமில் இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம் (மூளை மற்றும் தண்டுவடம்), நுரையீரல் மருத்துவம், எலும்புமுறிவு மற்றும் மூட்டு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை மருத்துவம், பொதுநல மருத்துவம், தோல் நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் சர்க்கரை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலசோனைகள் இலவசமாக அளிக்கப்படும். சிடி ஸ்கேன் 50% சலுகை கட்டணத்தில் செய்யப்படும். சிகிச்சைகள் மற்றும் இதர பரிசோதனைகளை 25% சலுகை கடடணத்தில் பெறலாம்.

கே.எம்.சி.ஹெச். கோவில்பாளையம் மருத்துவமனை – 87சி, சத்தி ரோடு, கோவில்பாளையம், கோவை 641107 என்ற முகவரியில் அமைந்துள்ள இம்மையத்தில் வரும் 24-ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இம்மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 87541 87551
கே.எம்.சி.ஹெச். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img