தமிழக முதல்வர் வேண்டுகோள்படி, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரியகடை வீதி பகுதிக்கழகம்- 1,வார்டு 80,இடையர்வீதி பகுதியில், பொதுமக்களுக்கு, கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் தொகுப்பை வழங்கினார் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக்.



