Homeபிற செய்திகள்கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம்

கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம்

கோவை கே.பி.ஆர்.ஐ. ஏ.எஸ். அகாடமி மாணவர் கள், சிவில் சர்வீஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த வருடத்திற்கான 685 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தியது. இதன் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

கோவை கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ்.அகாடமியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் பயிற்சி பெற்றவர்களில் 8 பேர் குடிமைப் பணி அதிகாரிகளாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்க ளில் டி.சுவாதிஸ்ரீ, அகில இந்திய அளவில் 42 இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

சி.எஸ்.ரம்யா அகில இந்திய அளவில் 46-வது இடத்தையும், தமிழகத்தில் இரண் டாவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிர்வாக இயக்குநர் கே.பி. டி. சிகாமணி, பயிற்சி இயக்குநர் பழனிமுருகன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயிற்சி பெற்று வெற்றி பெற்றவர்கள் விவரம்:
யுபிஎஸ்சி சிஎஸ்இ/ ஐஏஎஸ் ஐபிஎஸ் 2021: சுவாதிஸ்ரீ (அகில இந்திய ரேங்க் 42), ரம்யா (46), கமலேஷ்வர் ராவ் (297), கஜனன் பாலே (319), சிவராமன் (363), சிண்டே ஓம்கர் ராஜேந்திரா (433), சந்தோஷ்குமார் (503), குடியரசு (604).
கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின் பயிற்சி இயக்குநர் பழனிமுருகன் கூறியதாவது: 2022-23ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதத்தில் துவங்க உள் ளன.

எங்களது பயிற்சி மையத்தில் வெளியூர், மாணவ, மாண விகள் தங்கி பயிற்சி பெறுவதற்கான விடுதி வசதிகள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்த வர்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இப் பயிற்சியில் சேரலாம்.

7373911133 மற் றும் 7373911577 ஆகிய தொலைபேசி எண்களில் விவரம் அறியலாம் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img