fbpx
Homeபிற செய்திகள்கேர் பார் லைப் திட்டம்: ஜெம் மருத்துவமனையில் 75 பேருக்கு இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சை

கேர் பார் லைப் திட்டம்: ஜெம் மருத்துவமனையில் 75 பேருக்கு இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சை

கோவை ஜெம் மருத்துவமனையில் கேர் பார் லைப் திட்டத்தில் 75 பேருக்கு இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேர்மன் டாக்டர் பழ னிவேலு, டாக்டர் பிர வீன்ராஜ், சாந்தி சுரேஷ் ஆகியோர் கூறியதாவது:

ஜெம் மருத்துவமனை கேர் பார் லைப் திட்டத்தின் மூலம் ரோட்டரி மெட் ரோபோலிஸ், கோயம்புத்தூர் அமைப்புடன் இணைந்து, 75 இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து முடித்துள்ளது.

வாழ்க்கையையே புரட்டிப்போட்டு, வாழும் நாள்களை நரகமாக்கி, நோயாளியை மட்டும் இல்லாமல் அவரின் குடும்பத்தினரையும் மீளாத் துயரில் வாட்டும் கொடிய நோய் கேன்சர் பெரும் பணம் படைத்தவர்களே இதற்கான சிகிச்சைக்கு செலவு செய்து விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த துயர நிகழ்வை மாற்றி இயல்பானதொரு வாழ்க்கையை வாழ கோவை ஜெம் பவுண்டேஷன், ரோட்டரி மெட் ரோபோலிஸ் ஆகியவை இணைந்து நவீன அறுவை சிகிச்சையை ஏழை எளிய மக்களுக்கு 2022 ஜனவரி முதல் இலவசமாக வழங்கி வருகிறது.

வயிறு, குடல், கணையம், ஆசன வாய், கல்லீரல் போன்ற பகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் கண்டறியும் கேன்சருக்கு ஜெம் மருத்துவர்கள் முறையான அறுவை சிகிச்சை செய்து முற்றிலும் குணப்படுத்து கிறார்கள்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img