fbpx
Homeபிற செய்திகள்‘குழந்தைகளிடம் அன்பு பகிருங்கள்’ விவோவின் 3-வது வீடியோ பிரச்சாரம்

‘குழந்தைகளிடம் அன்பு பகிருங்கள்’ விவோவின் 3-வது வீடியோ பிரச்சாரம்

‘மொபைல் போன் களை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் அப்போது தான் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு மிகவும் மகிழ்ச்சி மிக்கதாக இருக்கும் என்ற பிரச்சாரத்தை விவோ நிறுவனம் முன்னெடுத் துள்ளது.

உலகளாவிய புதுமை மிக்க ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் ‘ஸ்விட்ச் ஆப்’ பிரச்சாரத்தின் 3-வது வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த பிரச்சார வீடியோ விவோ-சைபர் டெக் ரிசர்ச் அமைப்பும் இணைந்து நடத்திய ‘மனித உறவுகளில் ஸ்மார்ட் போன்களின் தாக்கம் 2021’ ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

விவோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனை பிரிவு இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், தொற்று நோய், டிஜிட்டல் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவற்றை இன்றியமையாத ஒன்றாக மாற்றி உள்ளது.

இதை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக அது எப்படி நம்மைச் சுற்றி உள் ளவர்களையும் இளம் தலைமுறையினரையும் பாதிக்கிறது என்பது குறித்து நாம் உணரவில்லை.

நாம் தற்போது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறோம்.
ஆனால் அந்த நேரத்தில் நாம் அவர்களுடன் பேசி வி¬ ளயாடுகிறோமா என்றால் இல்லை. அவர்களுடன் இருந்து கொண்டு ஸ்மார்ட்போனைத்தான் பயன் படுத்துகிறோம்.

அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை. எனவே இதை கருத்தில் கொண்டு, பெற்றோர்களின் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு எப்படி குழந்தைகளை பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்க £கவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். அதைத்தான் விவோவின் ‘ஸ்விட்ச்ஆப்’ பிரச்சார வீடி யோவிலும் கூறி உள்ளோம்.

உறவுகளுடனான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே இந்த வீடியோவின் முக்கிய நோக்கமாகும். இதை பெற்றோரை உணரச் செய்து எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமிக்கவர்களாக உரு வாக்குவதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது என்றார்.

லோவ் லின்டாஸ் நிறுவனத்தின் பிராந்திய படைப்பாற்றல் அதிகாரி அமர்சிங் கூறுகையில், நமது செயல்பாடுகளை பார்த்து குழந்தைகள் அதை வேகமாக பிடித்துக் கொள்வார்கள்.

குழந்தைகளின் மனம் என்பது எந்தவிதமான கள்ளங் கபடம் இல்லாத தாகும். இந்த வீடியோ, ஒரு சிறுவனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது என் றார்.

படிக்க வேண்டும்

spot_img