fbpx
Homeபிற செய்திகள்குறு, சிறு நிறுவனங்களுடன் கைகோர்க்க சிட்டார்க் விருப்பம்

குறு, சிறு நிறுவனங்களுடன் கைகோர்க்க சிட்டார்க் விருப்பம்

குறு, சிறு நிறுவனங்களின் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல சிட்டார்க் வாய்ப்புகளை உறுதி செய்து, தொலைநோக்கு பார்வையுடன் குறு, சிறு நிறுவனங்களுடன் கைகோர்த்து பணியாற்ற சித்த மாக உள்ளதுஎன சிட்டார்க் தெரி வித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழிற்கூட சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் (SITARC) ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக 1987-ம் ஆண்டு தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (SIEMA) மற்றும் கோவை மாவட்ட சிறு தொழில்களுக்கான சங்கம்(CODISSIA) ஆகிய தொழில் அமைப்புகளால் துவக்கப்பட்டது.

உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான தரம் மற்றும் பரிசோனை ஆராய்ச்சி மையமாக சிட்டார்க் சேவையாற்றி வருகிறது.

சிட்டார்க் அமைப்பின் 34-வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் கடந்த 17-ம் தேதி நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

தலைவர்- மா.செந்தில்குமார், நிர்வாக பங்குதாரர், சூப்பர்டெக் இண்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர்-கே.மோகன் செந்தில்குமார், நிர்வாக பங்குதாரர், அக்வாஃப்ளோ, செயலாளர்-ஆர்.கார்த்திகேயன், நிர்வாக பங்குதாரர், ஓம் முருகன் இண்டஸ்ட்ரீஸ், பொருளாளர்-சி.ஜி.ஸ்ரீபிரியா, இயக்குனர், பெஸ்ட் இன்ஜினீயரிங் பம்ப்ஸ் பி லிட்., ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிட்டார்க் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:வீடுகள், விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பம்ப் செட்டுகள், வீடுகள் மற்றும் பல்க் டைப் நீர் அளவு மீட்டர்கள், மின்சார மோட்டார்கள், நீர்மூழ்கி மோட்டார்கள், சோலார் பம்ப்கள் உள்ளிட்ட பரிசோதனை சேவைகளை சிட்டார்க் ஆற்றி வருகிறது.

சமீபத்தில் சிட்டார்க் ஆய்வகம் SITARC SMART PUMP திட்டத்தின் கீழ் தொழில்துறை மற் றும் நீர்வழங்கல் அமைப்புக்கு பயன்படுத்தப்படும் அதிக செயல்திறன் மிக்க 6” ஸ்மார்ட் நீர்மூழ்கி பம்ப் செட்டை, IIT , மெட்ராஸ் IISC பெங்களூரு, PSG தொழில்நுட்பக் கல்லூரி, கோவை மற்றும் துர்காபூர் உடன் இணைந்து உருவாக்கியது.

இந்த திட்டத்திற்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் நிதிய ளித்து உதவியது. இதற்காக UNIDO வின் விருதை சிட்டார்க் பெற்றுள்ளது.

சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த கட்டமைப்பை உருவாக்குவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. சிட்டார்க் சாத்தியப்படும் தொழில்நுட்ப தயாரிப்புகளை அடையாளம் கண்டு, அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் வடிவமைப்பை தொழில்துறைக்கு ஒப்படைக்கும் சீரிய பணியை வரும் காலங்களில் மேற்கொள்ள இருக்கிறது.

இது சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உயர்தர, உல களாவிய தயாரிப்புகளை எளிதாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வணிக மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக, குறு மற்றும் சிறு தொழில்களின் வாழ்வாதாரம் அதி களவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், வளர்ந்து வரும் வாய்ப்புகளின் பார்வையில் கோவையில் முன்மொழியப்பட்ட பாதுகாப்பு மண்டலமும் மற்றும் பம்ப் ஏற்றுமதி கிளஸ்டரும் வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உருவாகும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, சர்வதேச தரத்துடன் பொருந்தக்கூடிய செயல்திறனை மேம்படுத்திக் கொண்டால், குறு மற்றும் சிறு தொழில்கள் முன்னேற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கோவை நகரின் தொழில் துறைக்கு ஆற்றல்மிகு அச் சாணிகளான குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு சிட்டார்க் தனி கவனம் செலுத்தி அதன் தரத்தை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த தரமான கருவிகள், கண்காணிக்க வேண்டிய செயல்முறை போன்றவற்றில் பயிற்சி அளிப்பதன் மூலம் குறு, சிறு நிறுவனங்களின் அடுத்த நிலை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

குறு, சிறு நிறுவனங்களின் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல சிட்டார்க் வாய்ப்புகளை உறுதி செய்து தொலைநோக்கு பார்வையுடன் குறு, சிறு நிறுவனங்களுடன் கை« கார்த்து பணியாற்ற சித்தமாக உள்ளது.

சிட்டார்க் புதிய IEC குறியீட்டின்படி ஒரு சான்றிதழ் அமைப்பாக (CB) மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த உள்ளது. இது அனைத்து வளர்ந்த நாடுகளையும் சேர்த்து உலகம் முழுவதும் சந்தைப்படுத்த குறு, சிறு நிறுவனங்களின் தயாரிப்புகளை தகுதிப்படுத்தும்.

தொழிற்துறைக்காக ஏற்கனவே உள்ள சேவைகளை தவிர, கூடுதலாக மின்தேக்கிகள் (Capacitors), எடை அளவிடுதல், தங்க நகைகளை எடை போட பயன்படுத்தப்படும் அதிக துல்லியமான கருவிகள் ஆகியவற்றைச் சோதிக்கும் சேவைகளும் ஏற்படுத்தப்படும்.

அனைத்து முயற்சிகளும் தொழில்துறைக்கு அதிக அளவில் பயனளித்து வணிகம் மற்றும் வருவாயின் வளர்ச்சி அதிகரிக்கவித்தாகும் என்பதால், வெற்றியை உறுதி செய்வதற்கு அரசு, நிதி மற்றும் நிதி அல்லாத ஆதரவு அளித்தால் பெரும் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img