பொங்கல் பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர போலீசார் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கி வரும் போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடி உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடினர்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத் தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மாநகர போலீசார் அவர்களது குடும்பத்தினருடன் கோலமிட்டு தனித்தனியாக பொங்கல் வைத்து படை யல் வைத்து சூரியனை வழிபாடு செய்தனர்.
இந்த பொங்கல் நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர், மற்றும் போலீசார் அனைவரும் தமிழ் நாட்டின் பாராம் பரிய உடையான வேட்டி- சேலையில் கலந்து கொண்டனர். போலீஸ் பயிற்சி பள்ளி மைதான விழா கோலமாக காணப்பட் டது.