Homeபிற செய்திகள்குன்னூர் கரிமக்கழிவுகளை நிர்வகிக்க நவீனமாகிறது ஈரக்கழிவு செயலாக்கப் பிரிவு

குன்னூர் கரிமக்கழிவுகளை நிர்வகிக்க நவீனமாகிறது ஈரக்கழிவு செயலாக்கப் பிரிவு

மைக்ரோலேண்ட் லிமிடெட்டின் பிரத்யேக சமூக மேம்பாட்டுப் பிரி வான மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான கிளீன் குன் னூர் மற்றும் குன்னூர் நகராட்சியுடன் இணைந்து, ஓட்டுப்பட்டறையில் உள்ள ஈரக்கழிவு பதப்படுத்தும் வசதியை சுமார் ரூ. 60 லட்சம் செலவில் மேம்ப டுத்தியுள்ளது.

இந்த வசதியின் உள்கட்டமைப்பு, உபக ரணங்கள் மற்றும் செ யல்முறைகளையும் நவீனம யமாக்கியுள்ளது.

இந்த மையம் தற்போது குன்னூர் குடியிருப்பாளர்கள், சந்தை மற்றும் பல்வேறு வகையான உற்பத்தியாளர் களிடமிருந்து ஒரு நாளைக்கு 8 டன் வரை கரிமக் கழிவுகளை பெற்று அறிவியல் ரீதியாக நிர்வ கிக்கிறது.

இங்கு பிரித் தெடுக்கப்படும் கழிவு கள், ஏ தரச்சான்றிதழ் பெற்ற தரமான உரமாக மாற் றப்பட்டு, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்டங்களுக்கு மண் புத்துயிர் பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மைக்கான பரவ லாக்கப்பட்ட அணுகு முறையில் இது ஒரு முக்கிய படியாகும்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஈரக் கழிவு பதப்படுத்தும் பிரிவை திறந்து வைத்து பேசியதா வது:

இந்த மையத்தை அழ கிய கழிவு மேலாண்மை வசதியாக மாற்றுவதன் மூலம் நாங்கள் தொ டங்கிய பயணம் இன்று பிரத்யேக உரம் தயாரிக் கும் முற்றத்துடன் மேலும் விரிவடைந்து வருகி றது.

ஈரக்கழிவு வசதி யை மேம்படுத்துவது, பிரிக் கப்பட்ட கரிம வீட்டு சமையலறை கழிவுகள், பறவை வளர்ப்பு பண்ணை களின் கழிவுகள், பிற சந்தை கழிவுகள் மற்றும் தோட்டக்கழிவுகளை கை யாளுவதற்கு உதவுகிறது. சுற்றுலா காலங்கள் மற்றும் திருவிழாக்களின்போது அதிகரிக்கக்கூடிய கழிவுகளை கையாளும் திறன் தற்போது உருவாக் கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், குன்னூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை அறங்காவலர் கல்பனா கார், காந்திபேட் நல் வாழ்வு சங்கத்தின் து¬ ணத் தலைவர் ராஜஸ்ரீ பின்னமனேனி, கிளீன் குன்னூர் அமைப்பின் அறங்காவலர் டாக்டர் வசந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

2020-ல் சானிட்டரி நாப்கின்கள் போன்ற மறு சுழற்சி செய்ய முடியாத வகைகளை எரிக்க ஒரு 1.5 டன் அதிக வெப்பநிலை எரிபொருள் அல்லாத பர்னர் மற்றும் 50 KVA சர்வோ ஸ்டெபிலைசரும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளையால் குன் னூர் நகராட்சிக்கு நன் கொடையாக வழங்கப் பட்டது.

குடிமக்களிடம் இருந்து, குறிப்பாக குடிசைப்பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றி கழிவுகளை நேரடி யாக சேகரிக்கவும், விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், மூலோபாயப் பகுதிகளில் குப்பை கியோஸ்க்கள் வைக்கப்பட்டன.

இந்த கழிவுகளை சேகரிக்கும் பிக்கப் வேன்கள், நகராட்சி வாகனங்களை சார்ந்திருப்பதை குறைக் கும் வகையில் வழங் கப் பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img