fbpx
Homeபிற செய்திகள்கீரணத்தம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

கீரணத்தம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது :

எங்களது கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் டாஸ்மாக் கடை அமைப் தற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த டாஸ்மாக் கடை அமையக் கூடாது என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மேலாளரிடமும் கடிதம் கொடுத்துள்ளோம்.

தற்போது அமையவிருக்கும் டாஸ்மாக் கடையில் இருந்து 20 மீட்டர் தொலைவுக்குள் சிறுவர் பூங்கா, கோவில்கள் உள்ளன. மேலும் பெண் குழந்தைகள் அந்த வழியாகத்தான் பள் ளிக்குச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே எங்கள் ஊரில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

என்வே மீண்டும் டாஸ்மாக் கடை அமையக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img