கிறிஸ்துமஸ் நல் லெண்ண இயக்கம் சார் பில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை சாந்தோம் பள்ளி கலையரங்கில் இன்று (20ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனர் இனிகோ இருதயராஜ் முன்னிலை வகிக்கிறார்.
இதேபோல கோவை யில் வரும் 22ம் தேதி மாலை 7 மணிக்கு போத்தனூர் ஏ டூ இசட் மண்டபத்தில் நடக்கும் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் பெரு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் மகேந்திரன், சி.எஸ்.ஐ. பள்ளித் தாளாளர் பிரின்ஸ் கால்வின் ஆகி« யார் பங்கேற்று உரை யாற்றுகின்றனர்.
இந்த நிகழ்வில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடு களை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.



