fbpx
Homeபிற செய்திகள்கிராம சபைக் கூட்டங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கு கொள்ள வேண்டும்- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு

கிராம சபைக் கூட்டங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கு கொள்ள வேண்டும்- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டம்,தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு பேசியதாவது:

தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களை வலிமைப்படுத்தவும், அங்கே வளர்ச்சியினை ஊக்கப்படுத் தவும் ஊரக உள்ளாட்சி அமைப் புகளுக்கு உரிய அதிகாரங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து வாக் காளர்களையும் உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக் கென குறிப்பிட்ட அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்காக இது போன்ற கிராமசபைக் கூட்டங்களில் பொது மக்கள் கலந்துரையாடலாம்.

ஊராட்சியில் வரவு-செலவு தொடர்பாக சந்தேககங்களை கேட் டறிந்து கொள்ளலாம். கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை ஒரு அறிக்கையாக பெறப்பட்டு அதற்கான நடவ டிக்கைகள் உடனடியாக மேற் கொள்ளப்படும்.

18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் கிராம சபைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆவார்கள். எனவே இனிவரும் காலங்களில் தங்கள் பகுதிகளில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டு கிராம ஊராட்சிக்கான வளர்ச் சியில் தங்களது பங்களிப் பினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல¬ மச்சர் அவர்களால் அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய ஊராட்சி தின வாழ்த்து மடல் இக்கிராம சபையில் வாசிக்கப் பட்டது.

இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் வறுமையில்லா ஊராட்சி என்பது. யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சருக்கிவிடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும்.

அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல்,கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.

அனைத்து குழந்தைகளும், வாழ வும், வளரவும்,பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறன்கள் வெளிவரும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்தல்,அனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய நிலையில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலை,முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த குழுவை தொடர்ந்து பாதுகாத்தல், இயற் கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிர் கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும்,மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுபுறச்சூழலை பாது காத்து பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தக்க கிராம ஊராட்சியாக அமைத்தல், அனை வருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு, தேவையான அடிப்படை சேவைகள் வழங்குதல் போன்றவற்றுடன், தேவையான அனைத்து அடிப்படை கட் டமைப்பு வசதிகளையும் கொண்ட கிராம ஊராட்சியாக அமைத்தல், தகுதியுடைய அனைவரையும் சமூகப் பாது காப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும்.அனைவரும்,தாங்கள் அரவணைப்புடன் கவனிக்கப்ப டுகிறார்கள் என்பதை உணர நடவடிக்கைகள் எடுத்தல்,கிராம ஊராட்சியில் திறம்பட நடை பெறும் நல்ல ஆளுமையுடன் அனைத்து நலத்திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் அனைத் தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல், பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் பெண்கள் மற் றும் பெண் குழந்தைகளை வலி மைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெறும் வகையில், இடைவெளிகளைக் குறைத்து.

தரமான ‘கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை’ தயா ரித்து அதனை திறம்பட செயல் படுத்துவோம் என்று முடிவு எடுத்து அதன்படி செயல்படுவோம் என்று தீர்மானித்தல்,நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக பங்குள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான உறுதிமொழியினை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார்,உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருள் பிரகாஷ், மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேஷ் பிரபு, செந்தாமரை செல்வி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட் சிக் குழு உறுப்பினர் கவிதா கதிரேசன்,அழகன் குளம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி ,வாலாந் தரவை ஊராட்சிமன்ற தலைவர் முத்தமிழ் செல்வி பூர்ண வேல் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற் றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img