Homeபிற செய்திகள்கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 30 கண்மாய், 7 ஊரணி, 2 வரத்து கால்வாய்...

கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 30 கண்மாய், 7 ஊரணி, 2 வரத்து கால்வாய் தூர் வாரும் பணி துவக்கம்

2021-2022 – ம் ஆண்டில் பசுமை விடியல் திட்டத்தின்கீழ், 67 இடங்களில் மியாவாக்கி முறையில் சுமார் 48,230 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள் பசுமையான குறுங்காடுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில், சுமார் 100 தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு மியாவாக்கி குறுங்காடுகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.செய்தியாளர் பயணத்தின் போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநகாதரெட்டி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரம் கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாய் மற்றும் காரியாபட்டி வட்டாரம், துலுக்கன்குளம் ஊராட்சி கண்மாயினை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையும் இணைந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநகாதரெட்டி செய்தியாளர்களுடன் சென்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

ஆட்சியர் தெரிவித்ததாவது: மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது. மக்கள் சார்ந்து இருக்கும் நீர், காற்று, நிலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உரிய ஆக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாவட்டத்தில் மண், நீர் மற்றும் மழைவளத்தை பெருக்கும் பொருட்டு விவசாயத்துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

11 வட்டாரங்களில் நர்சரி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் ஒரு நாற்றங்கால் (நர்சரி) அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு குளத்துப்பட்டி ஊராட்சி செவல்கண்மாய் அருகில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் (நர்சரி) துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாற்றங்கால் (நர்சரி)-யில் உருவாக்கக்கூடிய கன்றுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், (KAVIADP) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள ஊராட்சிகளில் சிறுபாசன கண்மாய் – 30, ஊரணி – 7 மற்றும் வரத்துக்கால்வாய்-2 என்ற எண்ணிக்கையிலும் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

மண், நீர் மற்றும் மழை வளத்தினை பெருக்கும் பொருட்டு கடந்த 2021-2022 – ம் ஆண்டில் ‘பசுமை விடியல்’ திட்டத்தின்கீழ், 67 இடங்களில் மியாவாக்கி முறையில் சுமார் 48,230 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள் பசுமையான குறுங்காடுகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2022 -2023 – ம் நிதியாண்டில் சுமார் 100 தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு மியாவாக்கி குறுங்காடுகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ரூ.81.90 லட்சத்தில் நடவுப்பணி
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், துலுக்கன்குளம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ‘பசுமை விடியல்’ என்ற திட்டத்தின் கீழ், 20 ஏக்கர் பரப்பளவில் மர வேலைப்பாடு மரக்கன்றுகள் 1025 எண்ணமும், பழவகை மரக்கன்றுகள் 720 எண்ணமும் மியாவாக்கி முறை மரக்கன்றுகள் 900 எண்ணமும், சவுக்கு மரக்கன்றுகள் 7500 எண்ணமும், பனை மரக்கன்றுகள் 570 எண்ணமும் என ரூ.49 இலட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல், ரூ.30.40 இலட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை மற்றும் சுற்றுவேலி அமைத்தல் மற்றும் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் மண்புழு உரக்கூடம் மற்றும் கால்நடை தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.81.90 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மற்றும் இதரப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முன்னதாக, விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் ஊராட்சியில், இயற்கை ஆர்வலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான எம்.ஆர்.தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் நோக்கில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

பயணத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img