Homeபிற செய்திகள்கால்பந்து போட்டியில் கிக்கானி பள்ளி சாம்பியன்

கால்பந்து போட்டியில் கிக்கானி பள்ளி சாம்பியன்

பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் கோவை மாவட்ட குறுமைய போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் துவங் கியது. இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.

முதல் இரண்டு நாட்கள் பெண்களுக்கான போட்டிகளும் அடுத்த மூன்று நாட்கள் மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது.

இதில் கிக்கானி பள்ளி கால்பந்து , கைப்பந்து (ஹான்ட்பால்), ஹாக்கி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியில் பங்கெடுத்த 156 பதக்கங்களை மாணவ , மாணவிகள் பெற்றனர். கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து பிரிவுகளில் மாணவ, மாணவிகள் வெற்றி கோப்பைகளை கைப்பற்றினர்.

இதில் சிறப்பம்சமாக கால்பந்தில் கடந்த 20 வருடங்களாக கிக்கானி பள்ளி ஏதோ ஒரு பிரிவில் வெற்றி பெற்று கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னனாக திகழ்கின்றது.

ஹாக்கியிலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இப்பள்ளி வெற்றி பெறுவது குறிப் பிடத்தக்கது. கிக்கானி பள்ளி மாணவ மாணவிகள் கால்பந்து மற்றும் ஹாக்கியில் மாநில, தேசிய போட்டிகளிலும் பங்கு பெற்று உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை , தாளாளர் துஷார் கிக்கானி , பயிற்சியாளர் ஜேம்ஸ் கென்னடி , உடற்கல்வி இயக்குனர் சிபி , தலைமை ஆசிரியர் ஆனந்தி ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img