காரமடை நகராட்சியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை தாங்கினார் பொங்கல் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி நகராட்சி அலுவலகத்தில் வண்ண கோலங்கள் போட்டு, பொங்கலிட்டு நகராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.