fbpx
Homeபிற செய்திகள்காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கர்ம வீரர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு வடகோவையில் உள்ள அவரது சிலைக்கு பெருந் தலைவர் நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப் பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வராக இருந்த காலத்தில் தன்னலமற்ற தன் சமூக பணி காரணமாக புகழ்பெற்றவர் காமராஜர்.

இவர் போல் ஒரு தலைவர் வேண்டும் என்று ஏங்க வைக்க கூடிய தலைவராக இன்னும் தன் பெருமையுடன் இருக்க கூடிய அவரின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலைவர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் வடகோவையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர் நற்பணி மன்றத்தின் தலைவர் வேலுமயில் தலைமையில் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது காமராஜரை பெருமைபடுத்தும் வகையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img