fbpx
Homeபிற செய்திகள்காட்டு யானைகள் படையெடுப்பால் வால்பாறை பகுதி மக்கள் அச்சம்

காட்டு யானைகள் படையெடுப்பால் வால்பாறை பகுதி மக்கள் அச்சம்

வால்பாறையில் உள்ள தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளை நோக்கி கேரள வனப் பகுதியிலிருந்து கூட்டம், கூட்டமாக காட்டு யானைகள் படையெடுத்து வரத் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே காட்டு யானைகள் கூட்டம் நுழைந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வால்பாறை பகுதிக்கு படையெடுத்து வரத் தொடங்கி விட்டன.

வால்பாறை பகுதிக்கு அருகில் உள்ள முத்து முடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் ஒரே நேரத்தில் 30 – க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த யானைகள் கூட்டம் சிறு, சிறு கூட்டங்களாக பிரிந்து பல்வேறு எஸ்டேட் பகுதிக்குள் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வால்பாறை பகுதியில் உள்ள பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் வருகின்ற நாட்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே காட்டு யானைகளால் சேதங்கள் அதிகளவில் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே காட்டு யானைகள் நடமாட்டத்தை முழுமையாக கண்காணிப்பதற்கு கூடுதல் வனப் பணியாளர்களை பணியில் அமர்த்தி ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img