fbpx
Homeபிற செய்திகள்கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 30-ம் தேதி வரை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் சேலம் மாவட்ட ஆட்சியர்...

கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 30-ம் தேதி வரை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கற்போம் எழுதுவோம் என்ற திட்டத்தின் கீழ் கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை தெரிவிக்க கலைநிகழ்ச்சிகள் மூலம் வரும் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் என்ற திட்டத் தில், மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோர்களுக்கு அடிப்படை கல்வி அறிவை வழங்கும் பொருட்டும், கலைக் குழுவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், சமுதாய விழிப்புணர்வு வாகனத்தினை, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேற்று (செப்.22) கொடியசைத்து துவக்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சேலம் மாவட் டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் கற்போம் எழுது வோம் என்ற திட்டத்தில், கல்வி கற்றல் முக்கியத்துவத்தினை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கலைக் குழுக்கள் மூலம், கலை நிகழ்ச்சிகள் வரும் 30-ம் தேதி வரை 2 கலைக் குழுக்களை கொண்டு, மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளன.

கற்போம் எழுதுவோம் இயக் கத்தினுடைய ஒருமுனைப்பான நடவடிக்கையாக கலைக் குழுக்களை கொண்டு பொதுமக்களிடம் எழுத்தறிவை 100 சதவீதம் பர வலாக்கம் செய்வதற்காக கலை வடிவத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்திருக்கிறோம்.

குறிப்பாக சேலம்மாவட்டத்தின்எழுத்தறிவுசதவீதம்தமிழகத்தினுடைய எழுத்தறிவுசதவீதத்தைவிட 7 சதவீதம் குறைவாக உள்ளது.
சேலம் மாவட்டம் மிகச் சிறந்த மாவட் டம். இருப்பினும் எழுத்தறிவு சதவீதம் என்று வருகையில் நாம் பின்னோக்கி உள்ளோம்.

அது சற்று வருத்தம் அளிக்கக் கூடிய விஷயம். இதில் எந்தெந்த வட்டாரங்கள் எந்தெந்த கிராம பஞ்சாயத்துகள் எந்தெந்த வருவாய் கிராமங்களில் எழுத்தறிவு குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து குறிப்பாக அந்த பகுதிகளிலே இந்த கலை மூலமாக மக்களை எளிதாக சென்றடைகிறது.

பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு அடையச் செய்து அவர்கள் அனைவரையும் படிக்க, வாசிக்க, கற்பதில் மிகவும் அவசியம்.
கல்வியறிவு மிகவும் முக்கியம். அது இருந்தால் தான் மற்ற சமூகக் மேம்பாடுகள் அனைத்தும் நடக்கும்.

அந்த வகையில் இந்த விழிப்புணர்வு வாகனத்தை துவங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைக் குழுக்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, கிராமங்களுக்கு செல்லுங்கள்.

குறிப்பாக மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு கூட்டம் போட்டு, எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் உள்ள மாவட்டமாக மாற்ற வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img