கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், நீலகிரி மாவட்டம் சாந்தூர், நெலாக்கோட்டை ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டதில் 1,322 பேர் பயன டைந்துள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு அதனை சரி செய்வதற்காக மட்டுமே மருத்துவர் களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர்.
நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்கள், பேரூராட் சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.
பொது மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ பரிசோதனை எளிதில் கிடைக்க செய்தல், நோயாளிகளுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் செயல்படும்.
இம்முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மன நல மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்று நோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளி யோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
வட்டாரத்திற்கு 3 முகாம்கள்
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 1,250 மருத்துவ முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் கேத்தியில் இம்முகாமினை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மூலம் மாவட் டத்தில் ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்கள் வீதம் 4 வட்டாரங்களில் 12 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் தற்போது சாந்தூர், நெலாக்கோட்டை ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டதில் 1,322 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழக மக்களின் நலன்காக்க தொடர்ந்து பல்வேறு மருத்துவ நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் தலைமையிலான அரசுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
‘திருப்திகரமான பரிசோதனை’
‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி ஆலிவர் கூறியதாவது:
கேத்தி சாந்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 62 வயதாகிறது. வருடா வருடம் முழு உடல் பரிசோதனை மேற் கொள்ள மருத்துவமனைக்கு சென்று வருவேன். தற்போது எங்கள் பகுதிக்கே வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்து வர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்து உடல் பரிசோதனை செய்தது பயனுள்ள தாக இருந்தது. மருத்துவர்கள் பொறுமையாக பரிசோதித்தனர்.
எங்கள் இடத்திற்கே வருகை தந்து மருத்துவ பரிசோதனை செய் தது எதிர்பாராத ஒன்றாகவும் முழு திருப்திகரமாகவும் இருந்தது. எங்களை போன்ற வயதானவர் களுக்கு நாங்கள் வசிக்கும் பகுதிக்கே வருகை தந்து சிறப்பான மருத்துவ சேவையை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்திய முதல்வருக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தொகுப்பு
நி.சையத்முகம்மத்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
ஓ.ர.மனோஜ்குமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)
நீலகிரி மாவட்டம்.



