fbpx
Homeபிற செய்திகள்கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் வழங்க சிறப்பு நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் வழங்க சிறப்பு நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்

கர்ப்பிணிகளுக்கு அவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் மருத்துவமனைகளிலேயே, தடுப்பூசிகளை வழங்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.31) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுத லின்படி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணி யாளர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி வழங்கும் பணியினை மேலும் விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியினை விரைந்து பெற்றுக் கொள்ள ஏதுவாகவும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள், தொலைதூர கிராமங்க ளில் வசிப்பவர்களும் தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து வழங்க சிறப்பு முகாம் கள் நடத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர் களில், தடுப்பூசிகள் போடாமல் விடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் இருப்பி டங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்திட தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஏற்கனவே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள் ளது. அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கிட ஏதுவாக சிறப்பு முகாமினை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு அவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் மருத்துவமனைகளிலேயே தடுப்பூசிகளை வழங்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகளும் சுழற்சி முறையில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிபவர்கள், இதரப்பணியா ளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதை பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் களை நடத்திட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப்பணிகள்) மரு.சந்திரா உட் பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img