fbpx
Homeபிற செய்திகள்கர்நாடகாவில் போலீஸ் தாக்குதல் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் போலீஸ் தாக்குதல் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

படிக்க வேண்டும்

spot_img