fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறையின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தாழக்குடி, திட்டுவிளை, செண் பகராமன்புதூர், தேரூர், புத்தளம், திங்கள் நகர் பகுதிகளிலுள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய் தியாளர்களிடம் தெரி வித்ததாவது:
தமிழகஅரசு வேளாண் மைத்துறை, வேளாண்மை பொறியியில் துறை, வேளாண் விற்பனை கழகம் மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உட்பட பல்வேறு துறைகளின் வாயிலாக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை உலர்த் தவும், மூட்டையாக ஆக்குவதற்கும் இடவசதி குறைவாக உள்ள தாழக்குடி மற்றும் திட்டுவிளை நெல் நேரடி கொள்முதல் நிலை யங்களில் தற்காலிக தளம் மற்றும் மேற்கூரை அமைத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறமடம் அரசு தொடக் கப்பள்ளி வளாகம் மற்றும் கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்துவது தொடர்பாக கேட்டறியப்பட்டது.

செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உலர்த்தவும், மூட்டையாக்குவதற்கும் ஏதுவாக இரண்டு களங்களை அவ்வளாகத்தில் அமைக்கவும், ஏற்கெனவே பழுதடைந்த மேற்கூரை மற்றும் களத்தினை உடனடியாக பழுது பார்த்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

தேரூர் மற்றும் திங்கள்சந்தையில் ஏற்க னெவே ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் செயல்பட்டு வந்த நெல் நேரடி கொள்முதல் நிலையத்தினை மேம் படுத்தவும், சிறந்த முறையில் செயல் படுத்தவும் சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

புத்தளம் பகுதியில் கடந்த காலங்களில் நெல் நேரடி கொள் முதல் நிலையம் தனியார் கட் டிடத்தில் செயல்பட்டு வந்தது தற்போதைய பருவத்திலும் இக் கட்டிடத்திலேயே தொடர்ந்து நேரடி கொள்முதல் செய்யப்படும்.

நிரந்தரமாக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட மாற்று இடம் தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் உடனுக்குடன் கிடைத்திட அனைத்து அலுவலர்களும் ஒன்றுபட்டு செயல் படவேண்டும்இவ்வாறு செய்தியாளர் பய ணத்தின்போது, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.ஆர்.வாணி, மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாரிமுத்து, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பன்னீர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ஏழிசை செல்வி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஜெங்கின் பிரபாகர், வேளாண் விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img