ஒவ்வொரு பொருளையும் நமது தொழில் நுட்பத்தினைக்கொண்டு நாமே தயாரிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடையும் என்று ஜோஹோ பன்னாட்டு நிறுவனத்தின் நிறுவனத் – தலைவர் டாக்டர் ஸ்ரீதர்வேம்பு தெரிவித்தார்.
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பாக நடைபெற்ற திறமை, எளிமை, பெருமை என்ற நிகழ்ச்சியில், டாக்டர் ஸ்ரீதர்வேம்பு மேலும் பேசியதாவது:
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் வெளிநாட்டு தயாரிப்புகளாகவே உள்ளன. அதனால் நமக்கு தேவையான தயாரிப்புகளை நாமே தயாரிக்க வேண்டும்.
அதற்கான தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து, செயல்படுத்த நமது இளம் பொறி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.. ஜோஹோ நிறுவனம், பள்ளிக ளுக்கு சென்று மாணவர்கள் திறனை கண்டு அவர்களை தேர்ந்ªதடுத்து பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறது.
தற்போது ஜோஹோ நிறுவனம் தங்களது ஆராய்ச்சி மற்றும் அபி விருத்தி வசதிகளை கொண்டு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்னணு சிப்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறே ஒவ்வொரு பொருளையும் நமது தொழில் நுட்பத்தினைக் கொண்டு நாமே தயாரிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடையும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ஜோஹோ நிறுவனத்தில் மாணவர்கள் எதிர்காலம்,ஜோஹோ நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
நமது நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் மென் பொருள் நிறுவனங்களை கிராமப் புறங்களில் ஏற்படுத்தி நேரடி கிராமப்புற வேலை வாய்ப்புகளை தருவதுடன் மறைமுகமாகவும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சார்புத் தொழில்கள் வளர்ச்சி பெறும்.
இதன் மூலம் கிராமப் பொருளா தாரம் உயரும். சுயமுயற்சி, விடாமுயற்சி, எடுத்த காரியத்தில் உறுதியாக இருத்தல் ஆகியவையும் வெற்றிக்கான காரணங்கள். வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை கஷ்டமாக எடுத்துக் கொள்ளாமல் அதை ஏற்றுக் கொள்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.



