fbpx
Homeபிற செய்திகள்ஐசோப்ரொபைல் ஆல்கஹால் பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ஐசோப்ரொபைல் ஆல்கஹால் பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

இறக்குமதி செய்யப்பட்ட மிறிகி ன் பயன்பாடு ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளதால், மருந்துப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் ஐசோப்ரோபைல் ஆல்கஹால்களுக்கு IPA இந்திய மருந்தியல் (IP) சான்றிதழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலிவான இறக்குமதி செய்யப்பட்ட ஐபிஏ (IPA), யூ வி (UV) உறிஞ்சுதல் சோதனை, அன்சாசுரேடெட் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் விரைவாக கார்பனைஸ் செய்யக்கூடிய பொருள் போன்ற மருந்தியல் தரநிலைகளில் உள்ள பல்வேறு முக்கியமான அளவுருக்களை சந்திக்கத் தவறிவிட்டதாக இந்திய IPA உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“ஐசோப்ரொபைல் ஆல்கஹால் பல மருந்துக ளுக்கு ஒரு முக்கிய கரைப்பான் ஆகும். இது மாசுபடுத்துதல் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்து போன்ற இடர்களை கொண்டுள்ளது.

எனவே அவ சர கவனம் தேவை” என்கிறார் விகாஸ் பியானி (உதவி கமிஷனர் (ஓய்வு), மகாராஷ்டிரா (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) (FDA)]. இந்திய மருந்தியல் துறையானது 2021 நிதியாண்டில் மொத்தத் தேவையான 240,000 மெட்ரிக் டன் மிறிகிவில் சுமார் 170,000 மெட்ரிக் டன்களை பயன்படுத்தியுள்ளது.

அவ்வாறு மருந்தியல் துறையால் நுகரப்படும் 170,000 MT IPAவில், 12% மட்டுமே மருந்தக, இந்திய தரம் மற்றும் மருந்தியல் தரநிலைகளுக்கு பயன் படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை மருந்தகத்திற்கு ஆகாதவை.

இந்திய நுகர்வோரின் ஆரோக்கியத்தையும், இந்திய மருந்துத் துறையின் அந்தஸ்தையும் கருத்தில் கொண்டு, மருந்தகத்தில் இந்திய மருந்தியல் (IP) சான்றிதழுடன் IPAஐப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது மிகவும் முக்கியமானது.

மருந்தியல் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட துணைப்பொருட்கள் மற்றும் மிறிகி உள்ளிட்ட கரைப்பான்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் இன்னும் கடுமையான விதிகளை விதிக்கவில்லை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img