fbpx
Homeபிற செய்திகள்ஐக்யூஓஓ இசட்5 ஸ்மார்ட்போன் அக்டோபர் 3-ம் தேதிஅறிமுகம்

ஐக்யூஓஓ இசட்5 ஸ்மார்ட்போன் அக்டோபர் 3-ம் தேதிஅறிமுகம்

ஐக்யூஓஓ நிறுவனம் அதன் இசட் மாடல் ஸ்மார்ட் போன்களின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய இசட்5 ஸ்மார்ட்போனை ,இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஐக்யூஓஓ இசட்5 ஸ்மார்ட் போன் குவால்காம்ஸ் நாப்டி ராகன் 778ஜி 5ஜி மொபைல் இயங்குதளம் மற்றும் எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎப்எஸ் 3.1 பிளாஷ் மெமரி, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜர் மற்றும் 64எம்பி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான பிரதான கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏற்ற 4டிகேம் வைப்ரேஷன், லீனியர் மோட்டார், ஹை-ரெஸ் ஆடியோ ,இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் வெப்பத்தை குறைப்பதற்கான லிக்விட் கூலிங்டெக்னாலஜி ஆகியவை உள்ளன.

இது மிஸ்டிக்ஸ்பேஸ், ஆர்டிக்டான் ஆகிய 2 வண்ணங்களில் அமேசான்.இன் மற்றும் ஐக்யூஓஓஇ -ஸ்டோர்களில் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் 8ஜிபி + 128ஜிபி மாடல் 23,990 ரூபாய்க்கும் 12ஜிபி + 256 ஜிபிமாடல் 26,990 ரூபாய்க்கும்கிடைக்கும்.

புதிய அறிமுகம் குறித்து ஐக்யூஓஓ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ககன் அரோரா கூறுகையில், சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இசட்3 ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு ஏற்ற சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் எங்களின் புதிய இசட்5 ஸ்மார்ட்போனிலும் உள்ளது.

இது சமீபத்திய தொழில்நுட்பமான குவால்காம்ஸ் நாப்டிராகன் 778ஜி 5ஜி இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான 64 எம்பி பிரதான கேமரா, 8எம்பி வைட் -ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராஆகிய 3 பின்புற கேமராக்கள் உள்ளன.

பிரதான 64 எம்பிகேமரா நிகீ3 சென்சார் உதவியுடன் செயல்படுகிறது என்றார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள விவோ தொழிற்சாலையில் ஐக்யூஓஓ இசட்5 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img