fbpx
Homeபிற செய்திகள்ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1ல் தொடங்குகிறது

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1ல் தொடங்குகிறது

ராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி மஹான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலி யுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப் பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டு மின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. உலமாக்கள், தர்ஹா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் 23-நாட் கள் ஓதுவர்.

மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்று மைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். 10-ம் தேதி மாலையில் தர்ஹா வளாகத்தில் அடி மரம் ஏற்றப்படும்.

ஜூன் 11-ம் தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மஹாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்ஹா வந்தடைந்து, மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ம் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ம் தேதி அதி காலை தர்ஹா விற்கு சந்தனக்கூடு வந்த டையும். பின்னர் பாதுஷா நாய கத்தின் மக்பராவில் சந் தனம் பூசும் நிகழ்ச்சி நடை பெறும்.

ஜூன் 30-ந் தேதி கொடியிறக்கத் துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img