fbpx
Homeபிற செய்திகள்எம்எஸ்எம்இ களை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது ‘மீஷோ’

எம்எஸ்எம்இ களை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது ‘மீஷோ’

இந்தியாவின், மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய வர்த்தக நிறுவனமான மீஷோ, அதன் தளத்தில், சமீபத்தில் 6 லட்சம் விற்பனையாளர்களைத் தாண்டி, ஏப்ரல் 2021 முதல் 7 மடங்கு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டில், பூஜ்ஜிய கமிஷன் மற்றும் பூஜ்ஜிய அபராதம் போன்ற, நிறுவனத்தின், தொழில்துறை முதல் முயற்சிகளின் விளைவாக, மீஷோவில் அதிக எண்ணிக்கையிலான சிறு வணிகங்கள் இணைந்துள்ளன.

சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில் இருந்து வருகின்ற அதிக எண்ணிக்கையிலான விற்பனையாளர்களுடன், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 30,000 விற்பனையாளர் கள் உள்ளனர்.

மீஷோ விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட 70% பேர் அமிர்தசரஸ், தார்வாட், ராஜ்கோட் மற்றும் திருப்பூர் போன்ற அடுக்கு 2+ நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

விடாநம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியைத் தேடித் தரும் கருவிகளாகும். இதற்கு ரஜத் ஜெயின் ஒரு உதாரணம். ‘ஸ்மார்டீஸ்’ என்ற டி-ஷர்ட் பிராண்டின் உரிமையாளர் ஜெயின்.

ரஜத், 2013-ம் ஆண்டில், சூரத்தில், கடை கடையாக, டி-ஷர்ட்களை விற்கத் தொடங்கினார். பட்டப்படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, குடும்பத்திற்கு நிதி ஆதரவு செய்ய விரும்பினார். 2015-ம் ஆண்டில் இந்திய இன உடைகளுடன் ஈ-காமர்ஸில் நுழைந்தார்.

2017-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த பருத்தி மற்றும் பின்னலாடை ஏற்றுமதியில் சுமார் 70% பங்களிக்கும் தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூருக்கு, தனது தளத்தை மாற்றினார். 2018-ம் ஆண்டில், மீஷோவுடன் ரஜத் முதன்முறையாக ஒத்துழைத்தபோது, அவருக்கு இணைப் பாதுகாப்பு அல்லது கேள்விகள் எதுவும் தேவையில்லாமல் மற்றும் அவர் முக்கியமாக வலியுறுத்தும், உண்மையான ஆவணப்படுத்தல் செயல்முறைக்கு உதவி, ஆரம்ப நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
மீஷோவின் இந்த நம்பிக்கை மற்றும் நேர்மறையான வலுவூட்டல் தான் அவர் தனது வணிகத்தை டிஜிட்டல் மயமாக்கவும், ‘ஸ்மார்டீஸ்’ நிறுவனத்தை நிறுவுவதற்கு ஒரு உற்பத்தி அலகு அமைக்கவும் உதவியது.

2021-ம் ஆண்டு பண்டிகைக் காலத்தில், ஒரே நாளில் சராசரியாக 10,000+ ஆர்டர்களுடன், ஸ்மார்டீஸ், விற்பனையில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்த சாதனையைப் பதிவு செய்தது.

படிக்க வேண்டும்

spot_img