தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று கோவையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்ப £ளர்களை ஆதரித்து சிவா னந்தாகலானியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வரு கின்றது.
கோவை வ.உ.சி திடலில் பிரமாண்டமான கூட் டம் நடத்தியது 2011 ல் ஆட்சி அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது. தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அப்போது அகற்ற முடிந்தது.
மக்களுக்காக 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிகொடுத்தவர் ஜெயலலிதா. அவர் கொண்டு வந்த திட் டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலான அரசு.
100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரிவருவாயில் 3 ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக் கியது என பல திட்டங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்டவர் ஜெயல லிதா. கொரொனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது. எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது.
50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் செய்து காட்டியது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகர £ட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக ஆட்சிதான் சிறந்த்து என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
இரட்டை இலை சின்னத்தை நம்பி களத்தில் இருப்பவர்களை வெற்றி பெற வைக்கும் கட மை அதிமுக கட்சியினர் அனைவருக்கும் இருக்கின்றது.
சின்ன சரிவு. அதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதை சரி செய்துவிட்டது.
தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்
இதில் கோவை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், தாமோதரன், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



