உதகை, கூடலூருக்கு இரவு நேர பஸ்கள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் இரவு நேர பேருந்துகள் அனைத்தும் எதிர்வரும் – 1.10.2021 அன்று முதல் இரவு 10 முதல் காலை 6 மணி வரை கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
எனவே கோவை பகுதியிலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிகளுக்கு இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம்
செல்வதை தவிர்த்து கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் இரவு நேர பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



