fbpx
Homeபிற செய்திகள்உதகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.41 கோடியில் வளர்ச்சிப் பணிகள்- மாவட்ட ஆட்சியர் அம்ரித் பார்வை

உதகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.41 கோடியில் வளர்ச்சிப் பணிகள்- மாவட்ட ஆட்சியர் அம்ரித் பார்வை

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடநாடு எப்பநாடு ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் உதகை ,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் பொதுமக் களுக்கு தேவையான குடிநீர் சாலை மின்சாரம் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி களை தொடர்ந்து கண்காணித்து அதனை விரைவாகவும் தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடநாடு பகுதியிலுள்ள சொக்கனள்ளி கிராமத்தில பழங்குடியினர்களுக் கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் 20 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதே ஊராட்சியில் அவ் வீடுகளுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வரு கிறது. எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைக் கட்டி கிரா மத்தில் பழங்குடியினர்களுக் கான பசுமை வீடுகள் ரூ.3 இலட்சம் வீதம் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆக மொத்தம் 1.41 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும், அவ்வாறு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களின் தேவைக்கேற்ப நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து வகையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜா தா, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் நந்த குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன குமார மங் களம் ஸ்ரீதரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img