fbpx
Homeபிற செய்திகள்இளம் ரசிகர்களுக்கு ‘போகோ’ சேனல் அழைப்பு

இளம் ரசிகர்களுக்கு ‘போகோ’ சேனல் அழைப்பு

குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழ்ந்து வரும் வார்னர்ஸ்மீடியாவின் ‘போகோ’ ( Warner Media’s POGO) சேனல் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக இரண்டு வார காலத்திற்கு இரவு 6.30 மணிக்கு குழந்தைகளுக்கான பல்வேறு புதிய மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

இந்நிகழ்ச்சி குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் உற்சாகப்படுத்தும் விதமாக ‘Holi with Titoo Ki Toli’போட்டியுடன், நகைச்சுவை அனிமேஷன் தொடரான ‘Titoo-Har Jawaab Ka Sawaal Hu’’ தொடரில் Titoo தனது வேடிக்கையான செயல்களால் அனைவ¬ ரயும் மகிழ்விக்க இருக் கிறான்.

Titoo வின் புத்தம் புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30pm மணிக்கு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ளது.

மார்ச் 22 வரை ஒளிபரப்பாகும் ‘Holi with Titoo Ki Toli’ போட்டிக்கான விளம்பரதாரராக Alpenliebe Eclairs சாக்லேட்டும் இணை விளம்பரதாரராக Yellow Diamond ம் உள்ளன.

வீட்டில் மகிழ்ச்சியாக மற்றும் பாதுகாப்பாக ஹோலியைக் கொண்டா டுமாறு கூறியுள்ள போகோ சேனல் அதன் இளம் ரசிகர்களுக்கு ஏராளமான பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

Titoo வின் புதிய தொடர்களைப் பார்த்து, திரையில் வரும் கதாபாத்திரங்கள் தொட ர்பான கேள்விகளுக்கு குழந்தைகள்‘Watch and Win’போட்டியில் பங்கேற்று பதில் தரவலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் 9595084084 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிலை தெரிவிக்க வேண்டும்.

போட்டி குறித்து போகோ மற்றும் கார்ட்டூன் நெட்ஒர்க் தெற்காசியாவிற்கான தலைவர் அபிஷேக் தத்தா கூறுகையில், ‘Titoo- Har Jawaab Ka Sawal Hu’ என்னும் தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளில் வரவேற்பைப் பெற்ற தொடராகும்.

Titooற்கும் அவனது நண்பர்களுக்கும் உள்ள ரசிகர்களின் எண் ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இளம் ரசிகர் களுக்கு ஹோலியை இன்னும் வண்ணமயமாக மாற்றும் வகையில்‘‘Holi with Titoo ki Toli’’ போட்டியுடன் வருகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img