fbpx
Homeபிற செய்திகள்இல்லத்தரசிகளுக்கான சிறந்த நிதித் திட்டம் கைகோர்க்கும் மேக்ஸ்லைப், பாலிசி பஜார்

இல்லத்தரசிகளுக்கான சிறந்த நிதித் திட்டம் கைகோர்க்கும் மேக்ஸ்லைப், பாலிசி பஜார்

காப்பீட்டுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனமானது மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸுடன் கைகோர்த்து இல்லத்த ரசிகளின் பாதுகாப்புக் காக புதிய பாலிசியை அறிமுகம் செய்கிறது.

கணவரின் டேர்ம் இன் சூரன்ஸ் பாலிசியை பொருட்படுத்தாமல் சுதந்திரமாக இல்லத்தரசிகள் டேர்ம் இன்சூரன்ஸ் பெற முடியும். அதற்கான சிறப்புமிக்க சேவையை தற்போது அறிவித்துள்ளது.

நிதிப்பாதுகாப்பை இரட் டிப்பானதாக மாற்றக் கூடியதாக ‘மேக்ஸ்லைஃப் ஸ்மார்ட் செக்யூர் பிளஸ் திட்டம்‘ நுகர்வோருக்குக் கிடைக்கும். அதுவும், குடும்ப வருமானம் குறைந்த பட்சம் ரூ. ஆண்டுக்கு 5 லட்சம் எனும் வரம்புக்குள் என்பது ஹைலைட்.

18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஹோம் மேக்கர்களுக்கு இறப்பு மற்றும் அனைத்து ரைடர் நன்மைகளுடன் கூடிய பல்வேறு வகையான பிளான்கள் கிடைக்கும்.

பாலிசி பஜார்.காம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சர்ப்வீர்சிங் பேசும் போது, “பாலிசி பஜார் ஆனது ஆன்லைன் ஆயுள் காப்பீட்டு சந்தையில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் தலைமைத்துவ நிலையைக் கொண்டுள்ளது.

இருப்பினும், ஆன்லைன் பாதுகாப்பு வகையில் இல்லத்தரசிகளுக்கென எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லை. இந்தியச் சூழலில், இந்தப்பிரிவு ஒரு பெரிய சிக்கலாகவே நிலவுகிறது.

இந்நிலையில், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் அவர்களின் முக்கியமான முயற்சியில் பங்குதாரராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் ஹோம்மேக்கர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த தொடர்ச்சியாக செயல் படுவோம்” என்றார்.

மேக்ஸ்லைஃப் துணை நிர்வாக இயக்குனர் வி.விஸ்வானந்த் பேசும் போது, ‘இல்லத்தரசிகளாக பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாதது, ஈடு செய்ய முடியாதது.

அவர்கள் குடும்பத்தின் நல்வாழ்வைக் கவனித்துக் கொள்கிறார்கள், உணர்ச்சிப் பூர்வமாக பிறருக்காக வாழ்கிறார்கள். அதோடு, குடும்பத்தின் நிதி சமநிலையை உறுதிப்படுத்துகிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கான மேக்ஸ்லைஃப் ஸ்மார்ட் செக்யூர் பிளஸ் திட்டம் ஆனது, இந்தியப் பெண்ளின் முன்னேற்றத்துக் காகவும், சவாலான காலங்களில் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் சிறந்த நிதித்திட்டமாக இருக்கும்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img