fbpx
Homeபிற செய்திகள்இரண்டு சிறுநீரகங்களிலும் கல் உள்ள நோயாளிக்கு ஒரே நேரத்தில் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

இரண்டு சிறுநீரகங்களிலும் கல் உள்ள நோயாளிக்கு ஒரே நேரத்தில் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

இரண்டு சிறு நீரகங் களிலும் கல் இருந்து அத னால் பாதிக்கப்படும் நோ யாளிகளுக்கு ஒரே நேரத்தில் இரு சிறுநீரகங்களிலும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மேற் கொள்ளப்படுகிறது.

பொதுவாக இரண்டு சிறுநீரகங்களிலும் கல் ஏற்படுவது என்பது இயல் பான ஒன்றாகும். இது பலருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. எனவே, இரண்டு சிறுநீரகங்களிலும் கல் இருந்து அதனால் பாதிக்கப்படும் நோயாளி களுக்கு அந்த கற்களை நீக்க பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக ஒரே நேரத்தில் இருதரப்பு எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது புதியதோர் அறுவை சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சை முறையில் ஒரே நேரத்தில் 2 மருத்துவ குழுக்கள் 2 சிறுநீரகங்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கற்களை அகற்றுகின்றனர்.

இந்த அறுவை சிகிச் சையில் ஒரு மருத்துவ குழு ஒரு சிறுநீரகத்தில் உள்ள கல்லை சிறிய கீறல் மூலம் அகற்றும் சிகிச்சையிலும், அதேசமயம், மற்றொரு குழு மற்றொரு சிறுநீரகத்தில் உள்ள கல்லை முழுமையாக நீக்க சிறுநீர்க்குழாய் வழியாக சிகிச்சை மேற் கொள்கிறது.

ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் இந்த அறுவை சிகிச்சை இருதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு பயனளிக்கும் பாரம்பரிய ப்ரோன் நிலைக்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்ட லித்தோடோமி ஸ்பைன் முறையில் செய்யப்படுகிறது.

இந்த நவீன அறுவை சிகிச்சையை நோயாளிகள் மானிட்டரில் நேரடியாக பார்க்கும் வகையில் அவர் களுக்கு அந்த பகுதியில் உணர்வு இல்லாத வகையிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு செய்யப்படுகிறது.

இதன் காரணமாக நோயாளி முற்றிலும் மயக்க நிலைக்கு செல்ல வேண் டியதில்லை.இதனால் அறுவை சிகிச்சை முடிந்த உடன் நோயாளி விரைவாக இயல்பு நிலைக்கு வந்துவி டுவார்.

அவர்களுக்கான மருத்துவ செலவுகளும் வெகுவாக குறையும்.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள் வதில் உலக அளவில் முன்னணி மருத்துவம னைகளில் ஒன்றாக சவீதா மருத்துவக் கல்லூரி மற் றும் மருத்துவமனை விளங்கி வருகிறது.

இதை பாராட்டும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தபசுகான் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) மாநாட்டில் ‘பாண்டிச்சேரி வீடியோ பரிசு’ இம் மருத்துவமனைக்கு வழங் கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img