fbpx
Homeபிற செய்திகள்ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்துக்கு புதிய பங்கு தந்தையாக ஜோசப் டி செல்வராஜ் பொறுப்பேற்பு

ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்துக்கு புதிய பங்கு தந்தையாக ஜோசப் டி செல்வராஜ் பொறுப்பேற்பு

கோவை ஆர் எஸ் புரம் புனித அருளானந்தர் ஆலயத்துக்கு புதிய பங்கு தந்தையாக அருட்பணி. ஜோசப் டி செல்வராஜ் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் சார்பாக மேட்டுபாளையம் வட்டாரத்தின் முதன்மை குரு அருட்பணி.

ஜோசப் டேவிட் முன்னிலையில் பொறுப் பேற்றுக் கொண்டார்.

புதிய பங்கு தந்தைக்கு கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் ஐ.பி .லிங்கன், புனித பிரான்சிஸ்கன் சபையின் தலைவர் முனைவர்.ஜி.ஆல்பர்ட் அலெக்சாண்டர், மரியாயின் சேனை, புனித வின்சென்ட் டி பால் மற்றும் சபையின் பிரதிநிதிகளும், பங்கு மக்களும் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள்.

இதுவரை பங்கு தந்தையாக இருந்த அருட்பணி.விக்டர் பால் ராஜ் ஜோதிபுரம் புனித சகாயமாதா ஆலயத்திற்கு பங்கு தந்தையாக மாற்றலாகி செல்கின்றார்.

சிறப்பாக செயல்பட்ட அவருக்கு பங்கில் செயல்படும் பக்த சபைகள், பங்கு மக்கள் அனைவரும் நன்றியை தெரிவித்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img