fbpx
Homeபிற செய்திகள்ஆதி மாரியம்மன் கோவில் திருவிழா

ஆதி மாரியம்மன் கோவில் திருவிழா

கோவை கோவில் மேடு பகுதியில் உள்ள, ஆதிமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் முன்னிலையில், ஊர்வலமாக புலியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது,

கோவை மாவட்டம் கோவில் மேடு பகுதியில் அமைந்துள்ள ஆதி மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக கடந்த 4ம் தேதி 5ம் தேதி 6ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற்று வருகின்றது.

இதில் நான்காம் தேதியான நேற்று மாலை மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் புலியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img