Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் பல்கலை.யில் நன்றி நவிலும் விழா

அவினாசிலிங்கம் பல்கலை.யில் நன்றி நவிலும் விழா

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நன்றி நவிலும் விழா நடந்தது.

அவினாசிலிங்கம் பல்கலை. பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா வரவேற்றார்.
பல்கலை. துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கள் பேசியதாவது:
நன்றி நவிலும் விழா என்பது அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா சூழலால் இது நடைபெறவில்லை.

பல்கலை. பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்துள்ளது. 8154 மாணவியரையும், 395 ஆசிரியர்களையும், 254 ஆசிரியரல்லாத பணியாளர்களையும் 36 துறைகளையும், 7 புலம்களையும் கொண்டு பல்கலை. சிறப்பாக நடைபெற்று வருகிறது.

14 புரிந்துணர்வு ஒப்பந்தம், 13 முதன்மை ஆய்வுத் திட்டம், 40 ஆய்வு திட்டங்களுடன் பல்கலை. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 315 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டும், 37 விருதுகளைப் பெற்றும் பேராசிரியர்கள் பல்கலை.க்கு சிறப்புச் சேர்த்தனர் என்றார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் சென்ற ஆண்டின் மாணவியர் தலைவிகள், வருங்கால மாணவியர் தலைவிகளுக்குப் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது.

ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது: நமது கல்வியில் மாற்றங்கள் வரலாம். ஆனால் அதன் மதிப்புகள் என்றும் குறையாது. போட்டி நிறைந்த இன்றைய உலகில் மாணவிகள் வெற்றிக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், மகளிர் கல்வி என்பது போற்றுதலுக்குரியது. எனது வாழ்வின் வளர்ச்சிக்கு வழி நடத்தி மெருகேற்றியவர்கள் 3 1/2 பெண்கள். முதலாவது பாட்டி, இரண்டாவது அன்னை, மூன்றாவது மனைவி, 1/2 எனது மகள். பெண் கல்வி யாவற்றையும் செய்யும். பெண்களால் மட்டுமே அனைத்தும் முடியும் என்பதனை எனது குடும்பத்தில் உள்ள பெண்களின் மூலம் அறிந்து கொண்டேன்.

கல்வி என்பது ஓர் ஆயுதம். அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவி களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.
பல்கலை. மாணவியர் புல முதன்மையர் முனைவர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img