பல்வேறு துறைகளில் உள்ள மாண வர்களின் தேவைக்கு மென்பொருள் பயிற்சித்திறன் வளர்த்தல் உள்ளிட்ட மேம்பாட்டு திறன்களுக்காக அவினா சிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம், சிஏடிடி (கிளவ்ட் கேம்பஸ்) CADD (CloudKampus)) பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பல்கலை. வேந்தர் பேராசிரியர் எஸ்.பி. தியாகராஜன், துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், பதிவாளர், முனைவர் எஸ்.கவுசல்யா, முதல்வர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) முனைவர் வி. முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிஏடிடி மையம் சார்பில் அதன் தலைவர் முனைவர் ஆர். பார்த்தசாரதி, முனைவர் சித்ரா பார்த்தசாரதி, சந்தர், சந்தோஷ் ஆகியோரும் பங்கேற்றனர். நவம்பர் 2021 முதல் அக்டோபர் 2024 வரை மூன்று ஆண்டுகளுக்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.
இதன் முக்கிய நோக்கம் பல்வேறு துறைகளில் உள்ள மாணவர்களின் தேவைக்கு மென்பொருள் பயிற்சித் திறன் வளர்த்தல், தனிப்பட்ட மேம்பாடுத் திறன்கள் மற்றும் திட்ட மேலாண்மைத் திறன் வழங்குதல். இதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்பு மேம்படும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அவர்களுக்கு தடையின்றி மேம்பாட்டு பயிற்சி அமையும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாகவும் அவர்களின் இலக்கும் இலட்சியமும் முழுமையாகவும் செழுமையாகவும் அவர்கள் பட்டம் பெறும் அளவிற்கு தயார்படுத்தப்படும்.
பல்வேறு தொழில்களின் வளர்ந்து வரும் புதுமைகளின் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள் வதற்கும், வேலைவாய்ப்பில் முதன்மை பெறுவதற்கும் பயிற்சி தேவைப்படுகிறது.
மாணவர்களின் செயல்திறன், தனிப்பட்ட மேம்பாட்டுத்திறன், திட்ட மேலாண்மை மென்பொருள்திறன் ஆகியவற்றை சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.
மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு சமாளித்து தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதை மேம்படுத்த உதவுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் எற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்டவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.



