fbpx
Homeபிற செய்திகள்அண்ணா, கருணாநிதி வேடமணிந்து வந்து மனு அளித்த நடன கலைஞர்கள்

அண்ணா, கருணாநிதி வேடமணிந்து வந்து மனு அளித்த நடன கலைஞர்கள்

கோவையில் உள்ள கோவில்களில் முறையான நடன நிகழ்ச்சிகள் நடத்த வலியுறுத்தி நடன கலைஞர்கள் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் போல் வேடமணிந்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவையைச்சேர்ந்த நடன கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல் வேடமணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி திரைப்பட மேடை நடன கலைஞர்கள் சங்கத்தில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் கடும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது தமிழக அரசின் அனுமதியுடன் தமிழகம் முழுக்க உள்ள கோவில்களில் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஆனால் கோவையில் முறையான நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சுமார் 6 மாதங்கள் மட்டும் தான் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே கோவையிலும் கோவில் திருவிழாக்களில் நடனமாட அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img