கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அக்ரி கிளினிக் மற் றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.
இத்திட்டம், நபார்டுடன் இணைந்து இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் நடத் தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் வழியாக செயல்படுத் தப்பட்டு, அதற்குரிய 45 நாட்கள் பயிற்சி நேற்று முன்தினம் (ஏப்.6) கல்லூரி வளாகத்தில் துவங் கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட 30 பேர் பங்கேற்றனர்.
துவக்க விழாவில், கல்லூரி செயலர் முனைவர் என்.யசோதா தேவி வர வேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.நிர்மலா பேசும்போது, இத்திட்டத்தின் வழியாக விவசாயிகள் சமூக பொருளா தாரத்தில் வளர்ச்சியும், வணிக வேளாண் மையில் மேம்பாடும் அடைவது உறுதி என்று கூறினார்.
இத்திட்டத்தை துவக்கி வைத்து வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ரா தேவி பேசும்போது, வேலை வாய்ப்பை தேடும் இள வயதினர் இத் திட்டத்தின் வழியாக பயனடைவர்.
இப்பயிற்சியின் வழியாக விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அறிந்து செயல்பட வழிவகை செய்வதோடு அவர்கள் வணிக நோக்கில் செயல்படுவதற்குரிய பயிற்சியும் அளிக்கப் படும்.
வருங்காலத்தில் சொட்டு நீர் பாசன பயன்பாடு மேலோங்கும், பயனாளிகளுக்கு அரசு ரூ.ஓரு லட்சம் மானியத் தொகை அளித்து ஊக்குவிக்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இணைய தளம் வழியாக ஹைதராபாத் தைச் சார்ந்த மாநில ஆலோசகர் ரூபேஷ் பேசுகையில், இத்திட்டம் (ஏசிஏபிசி) 2002ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பயிற்சியால் 79 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
இப்பயிற்சியை 45 நாட்கள் முடித்த பின்பும் கூட ஒரு வருடம் வரை நிறுவன வழிகாட்டுதல் மூலம் பயன்பெறுவார்கள் என்றார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற பதிவாளர் முனைவர் பி.சந்தானகிருஷ்ணன், கனரா வங்கி லிட்., வங்கி மேலாளர் பி.கௌசல்யா தேவி, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேலாண்மையியல் துறைத் தலைவர் முனைவர் என். வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் கருத்துகளை பரி மாறிக் கொண்டனர்.
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் கல்லூரி உதவி பேராசிரியரும் நோடல் அதிகா ரியுமான முனைவர் ஆர். திவ்யா நன்றி கூறினார்.



