Homeபிற செய்திகள்ஹோட்டல் ஹரிபவனம் கிளை அவினாசியில் 10-ம் தேதி திறப்பு

ஹோட்டல் ஹரிபவனம் கிளை அவினாசியில் 10-ம் தேதி திறப்பு

அவினாசியில் ஹோட் டல் ஹரிபவனம் தனது 7-வது கிளையை வரும் 10-ம் தேதி துவக்குகிறது.

கோவையில் 1971-ம் ஆண்டு முதல் அசைவம் மற்றும் சைவ உணவுப் பிரியர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஹோட் டல் ஹரிபவனம்.

திருப்பூர்-அவினாசி ரோடு, சர்வீஸ் டிராக், தேசிய நெடுஞ்சாலையில், சுப்ரீம் விஸ்டா காம்ப்ள க்ஸ்-ல் நவீன வசதிகளுடன் இக்கிளை அமைந்துள்ளது.

50-வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹரிபவனம் நிறுவனர் மறைந்த எஸ்.ராஜூவின் திருவுருவச் சிலை திறக்கப்பட உள்ளது.

தொழில் நகரமான திருப்பூருக்கு அருகில் இக் கிளை அமைந்திருப்பதால், வர்த்தகம் தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மீட்டிங் ஹால் பயன் பாட்டிற்கும் ஏற்ற வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான விழாக்கள் நடத்துவதற்கு வசதியாக 50 பேர் வரை அமரக்கூடிய வகையில் மினி பேங்குவிட் ஹால் அரங்கமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள லாம்.

ஐஸ் கிரீம் பார்லர், கஃபே மற்றும், சாட், ஜூஸ் வகைகளும் உள்ளன. பேல் பூரி, பானி பூரி மற்றும் பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகளும் கிடைக்கும். இதற்காக அழகிய காரிடார் அமைக்கப்பட்டுள்ளது.

பாலூட்டும் தாய்மார் களின் வசதிக்காக பேபி கேர் ரூம் உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கான இடவசதியுடன் கூடிய விசாலமான கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஹரிபவனம் ஹோட்ட லின் கிளைகள் கோவை காந்திபுரம், பீளமேடு, கோல் டுவின்ஸ், புரோஜோன் மால், புரூக்ஃபீல்ட்ஸ் மால் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது.

இத்தகவலை ஹோட் டல் ஹரிபவனம் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜூ தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img