ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர், இந்திய ராணு வம் மற்றும் விமானப் படை அதிகாரியாக இரண்டிலும் தேர்வு செய்யப்பட்டார். விமான படை அதிகா ரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்
கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் எம்.அருண் கடந்த ஜூன் மாதம் தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்றார்.
கல்லூரி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த இவர், கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் நடைபெற்ற இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு அதிகாரி பதவியில் சேர்வதற்கான இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது விமானப் படை அதிகாரி பணியில் சேர்வதற்கான நியமன ஆணையை அவர் இந்திய அரசிடம் பெற்றுக் கொண்டார்.
அவர் பொறியியல் படிப்பு படிக்கும் போது, தேசிய மாணவர் படை யில் தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
அருண் புரிந்த சாதனை யை எஸ்.என் ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு, துணை முதல்வர் முனைவர் ப.கருப்புசாமி, என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் முனைவர் மா.ரமேஷ், தகவல் தொழில் நுட்பத் துறைத் தலைவர் முனைவர் செந்தமிழ் செல்வி ஆகி யோர் பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தனர்.



