fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலைஅறிவியல் கல்லூரியின் 27 பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலைஅறிவியல் கல்லூரியின் 27 பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டம்

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் 27 பேராசிரியர்கள் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற் றும் 27 பேராசிரியர்கள், தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி அவர்க ளிடம் முனைவர் பட்டம் (பிஎச்.டி.) பெற்றனர்.

இதன்படி எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 3, எம்.பி.ஏ. துறையில் 3, ஆங்கிலத் துறையில் 3, பி.காம் துறையில் 3, தமிழ்த் துறையில் 2, பி.காம்.பி.ஏ. துறையில் 2, கணினிஅறிவியல் துறையில் 2, பி.சி.ஏ. துறையில் 2, பன்னாட்டு வணிகம், பி.காம்.சி.எஸ்., பி.காம்.பி.பி.எஸ்., கணிதம், பி.காம்.ஐ.டி., பி.எஸ்சி.ஐ.டி., நூலகம் ஆகியதுறைகளில்தலா 1 என மொத்தம் 27 பேர் முனை வர் பட்டம் பெற்றனர்.

முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர் வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வாழ்த்து தெரிவித்தனர்

படிக்க வேண்டும்

spot_img