கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி மற்றும் நிர்வாகி கே. ஆதித்யா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். இந்த நிகழ்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.



