fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அனைத்து துறை ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்- விவசாயிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அனைத்து துறை ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்- விவசாயிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை நடத்தும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் செட்டிகரை ஊராட்சி அலுவலகத்தில், உதவி தோட்டக்கலை அலுவலர் வசந்தி தலைமையில் நடந்தது.

இம்முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் மூர்த்தி, செட்டிகரை கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன், செட்டிகரை ஊராட்சி செயலர் சண் முகம், செட்டிகரை கால் நடை மருத்துவர் மணிவ ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் தகுதியுள்ள விவசாயி களுக்கு கிசான் கடன் அட்டையும், 25 பயனாளி களுக்கு வீட்டுக்கு தேவை யான காய்கறி விதை கிட், 25 பயனாளிகளுக்கு தென்னங் கன்று, துவரை 15 விவசாயிகளுக்கும், 5 நபர்களுக்கு விசைத் தெளிப்பான் மற்றும் 5 நபர்களுக்கு கைத்தெளி ப்பான் வழங்கப்
பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்பாக செட்டிகரை கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img