வேலூர் மாவட்டம், கீ.வி.குப்பம் வட்டம் காங்குப்பம் ஊராட்சி, மூலகாங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வதை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் 100% தடுப்பூசி செலுத்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் முதியோர் உதவி தொகை, பட்டா தொடர்பான கோரிக்கை மனுக்களை விரைந்து விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



