செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளக் கோவில் நகராட்சி சமுதாய நலக் கூடத்தில் நேற்று (செப்.17) ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட் டத்தினை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதே சமயத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை காணொளி காட்சி மூலம் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட் டங்களுக்கும் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில், முதற் கட்டமாக அவினாசி வட்டம் சேவூர், அவினாசி, நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர், திரு முருகன்பூண்டி ஆகிய ஐந்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 25 துணை சுகாதார நிலையங்கள் சார்ந்த கிராமங்களின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடை முறைப் படுத்தப்பட்டது.
பின்னர் படிப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளக்கோவில், வெள்ளக் கோவில் நகராட்சி சமுதாய நலக் கூடத்திலும் பின்னர் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் விரி வுப்படுத்தப்பட உள்ளது.
முதல்வர் அறிவுறுத்தலின் படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை ஏனைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட, தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்துள்ளது.
தற்போது மக்களுக்கு அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தேவையான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம்
அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார் பாக ஜந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, தீவிர வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாம் திருப்பூர் மாவட்டத்தில் 16.09.2021 முதல் 30.09.2021 வரை நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 2,21,689 குழந் தைகளுக்கு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த இருவாரங்களில் அனைத்து அங்கன்வாடி மை யங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வயிற்றுப் போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற்றும் அதன் அவசியத்தைப் பற் றியும், 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைளுக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத் தைப் பற்றியும், உப்பு, சர்க்கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உப்பு கரைசல் மற்றும் துத்தநாத மாத்திரையினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்க ளது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
விழாவில், வெள்ளக்கோவில் நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்த தீவிர வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் இருவார முகாமினை துவக்கி வைத்து, நோயாளிகளின் இல்லத் திற்கே சென்று மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்.
துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.



