கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் செயல்பட்டுவரும், தொழில்முனைவோர்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கீரணத்தம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது.
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், சர்க்கார் சாமக் குளம் ஊராட்சி ஒன்றியம், கொண் டையம்பாளையம் ஊராட்சியில், புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பிய இளைஞர்களுக்கான கோவிட் சிறப்பு நிதி ரூ.1 லட்சம் நிதியுதவியுடன் என்.நந்தகுமார் என்பவர் நடத்தும் பிளாஸ்டிக் மோல்டிங் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவ னத்தை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
தங்கமலர் மகளிர் சுயஉத விக்குழு மூலம் 10 ஒத்த தொழில் செய்யும் மகளிரை கொண்டு ரூ.75,000/- நிதியுதவியுடன் நடத் தப்பட்டு வரும் டைலரிங் யூனிட் டையும், அக்ரகார சாமக்குளம் ஊராட்சியில், சமுதாயத் திறன் பள்ளி மூலமாக ஆரி மற்றும் எம்ப்ராய்டரி ஒரு மாத கால இலவச பயிற்சி வகுப்பு ரூ.1 லட்சம் நிதியுதவியுடன் 25 மகளிருக்கு பயிற்றுநரைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகிறது.
புலம் பெயர்ந்து மீண்டும் திரும்பிய இளைஞர்களுக்கான கோவிட் சிறப்பு நிதி ரூ.1 லட்சம் கீரணத்தம் ஊராட்சியை சார்ந்த ஏ.மோகனப்பிரியா என்ப வருக்கு ஸ்டேஷ்னரி கடைக்கென வழங்கப்பட்டது.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 25% மானியத்துடன் ரூ.5 லட்சம் வங்கி நிதி இணைப்பு செய்து கொடுக்கப்பட்டது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, சர்க்கார் சாமக்கு ளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாமில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் கரும்புசார் ஒருங்கிணைந்த பண்ணை முறை புத்தகத்தினை வெளியிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ஜெகதீசன், செயல் அலுவலர் மணிமாறன், ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா, உதவி செயற்பொறியாளர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனிதா, சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



