வால்பாறை ஒன்றியம் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக வசந்தகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காலத்தில், மாணவர்களை நேரடியாக சந்தித்து துணைக்கருவிகளின் மூலமாக கணிதத்தை சுலபமான வழிகளில் கற்பித்து வந்தார். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்காக இணைய வழியில் இலவசமாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தனது கணித கற்பித்தல் முறைகளை கணிதவாணி என்ற இணைய இதழில் எழுதி வருகிறார். இந்நிலையில், இவரது சிறப்பு மிக்க பணிகளைப் பாராட்டி, மக்கள் கல்வி மையமும், அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமும் இணைந்து கோவையில் நடைபெற்ற எளிய விழாவில் இவருக்கு கல்வி திலகம் என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
இது இவர் பேரும் 199வது விருது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



