ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் 20 மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்புக்குரிய பயிற்சி அளித்தது. அதன் நிறைவு விழா தலைவர் பழனியப்பன் தலைமையில் நடந்தது.
புராஜக்ட் சேர்மன் ஜுக், செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகி குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்னதாக 25 மாண வர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை சம்பந்தப்பட்ட கோ-இன் டியா வளாகத்தில் அளிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது குழுவுக்காக கோ-இன்டியா வளாகத்தில் மாணவர்களை தேர்வு செய்து, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் மூலமாக 21 நாள், சி.என்.சி. மெஷின் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் இலவச பயிற்சிக்கு அனுப்பியது.
பயிற்சி முடித்த அனைவருக்கும் கோவை சுற்று வட்டாரங்களில் உள்ள தொழிற் சாலைகளில் கோ-இன்டியா மூலமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப் பினை உருவாக்கி கோ-இன்டியா கடந்த 16 ஆண்டுகளாக இச்சேவையை செய்து வருகிறது.
இந்த அரிய பெரும் வாய்ப் பினை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் உடன் இணைந்து கோ-இன்டியா நல்ல வாய்ப்பாக உதவி செய்து வருகிறது.
பயிற்சி பெற்ற 20 மாணவர்களுக்கு, பயிற்சி முதலான செலவுகளை டாக்டர் சண்முகநாதன் கனகவள்ளி சாரிடபிள் டிரஸ்ட் (கங்கா மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் பி.லிட்) மேற்கொண்டது.



